'இந்தியா போஸ்ட் மொபைல் பேங்கிங்' பற்றி தெரிந்துகொள்ளுங்கள்


Sugapriya Prakash| Last Modified திங்கள், 19 செப்டம்பர் 2016 (10:34 IST)
தபால் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு கணக்குகளுக்கும் இணையதள வங்கி சேவை உள்ளது. 'இந்தியா போஸ்ட் மொபைல் பேங்கிங்' என்ற செயலியும் உள்ளது.

 
 
இது தபால் அலுவலகத்தின் வங்கி சேவை முழுவதுமாக துவங்குவதற்கு முன்பே அதில் ஏற்கனவே உள்ள சேமிப்பு திட்டங்களின் கீழ் பயன்பாட்டிற்கு வரும். 
 
தபால் துறை எம்-பின், பரிவர்த்தனை கடவுச்சொல், பயனர் ஐடி மற்றும் ஓடிபி போன்றவற்றை கேட்காது. கணக்கு விவரங்கள், பணம் அனுப்புதல், கட்டணம் செலுத்துதல், செக்குகள், கோரிக்கைகள் போன்ற தெரிவுகள் உள்ளன.
 
கணக்குகள் தெரிவில் சென்று சேமிப்பு கணக்கு, பிபிஎஃப் கணக்கு, தொடர் சேமிப்பு கணக்குகள், தேசிய ஓய்வூதிய திட்டம் போன்ற அனைத்து சேமிப்பு கணக்கு விவரங்களையும் பார்க்கலாம். பண பரிமாற்றும் செய்தல், கட்டணம் செலுத்துதல், செக்குகள் போன்று வங்கி கணக்கில் உள்ள அனைத்துச் சேவைகளையும் அளிக்கிறது.
 
இதனை, தபால் அலுவலகத்தின் மொபைல் பேங்கிங் செயலியை இந்த இணைப்பில் சென்று பதிவிறக்கலாம். பதிவிறக்கிய பிறகு செயலியை பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்ட்ம். ஒரு முறை கடவுச்சொல் போன்ற எவற்றிற்கும் எந்தக் கட்டணங்களும் செலுத்தத் தேவை இல்லை. வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு 4 இலக்க எம்-பின் எண்ணை உருவாக்குக.
 
தபால் அலுவலகத்தின் மொபைல் பேங்கிங் செயலியில் உள்ள சந்தேகங்களை தீர்க்க 18004252440 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.


இதில் மேலும் படிக்கவும் :