1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By

பேமெண்ட் வங்கிகளை அணுகும் முன்... இதை படியுங்க!!

ரிசர்வ் வங்கி பேமெண்ட் வங்கிகளை அதிகாரப்பூர்வமாக ஆக்கியுள்ளது. பேமெண்ட் வங்கிகள் டிஜிட்டல் வாலட்டுகளுடன் ஒப்பிடும் போது மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கினாலும், அதில் சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. 
 
1. பேமெண்ட் வங்கிகள் வழங்கும் சேவைகளை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அந்நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதம் கவனிக்க வேண்டிய ஒன்று. 
 
2. பேமெண்ட் வங்கிகளும் சேமிப்பு கணக்குகளில் போடப்படும் வைப்பு தொகைகளுக்கு வட்டியை வழங்குகின்றன. ஆனால் வட்டி வகிதம் வேறுபடும். 
 
3. பேமெண்ட் வங்கிகள் இதர வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கு பயன்படுத்த கூடிய ஏடிஎம் கார்டுகளை வழங்குகிறதா என்படஹி கவனிக்க வேண்டும். 
 
4. முக்கியமாக எந்த வகை தொகுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன என்பதை பொறுத்து  பேமெண்ட் வங்கியை தேர்ந்தெடுக்க வேண்டும். 
5. வட்டி விகிதங்களை போலவே பேமெண்ட் வங்கிகள் வழங்கும் சேவைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்களை பற்றியும் தெரிந்துக்கொள்வது அவசியமாகும். 
 
6. பேமெண்ட் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை முன்தொகையாகவோ கடனாகவோ கொடுக்காது. அவை செக்புக் மற்றும் டெபிட் கார்ட் வழங்கும். கிரெடிட் கார்டுகளை வழங்காது. 
 
7. பேமென்ட் வங்கி கணக்குகளில் ஒரு வரையறுக்கப்பட்ட தொகையை மட்டுமே வாடிகையாளர்கள் சேமித்து வைத்திருக்க முடியும்.