Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜியோ vs ஏர்டெல்: 5 ரூபாயும், 1 ஜிபியும்...

Last Updated: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (19:44 IST)
நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், ஜியோவின் ரூ.98 சலுகைகளுக்கு போட்டியாக புதிய திட்டங்களை பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

ஏர்டெல் அறித்துள்ள ரூ.93 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகளும், தினமும் 1 ஜிபி டேட்டா, தினம் 100 எஸ்எம்எஸ் 10 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 1 ஜிபி டேட்டா திட்டம் அனைத்து சாதனங்களிலும் பொருந்தும் என்று 3ஜி அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏர்டெல் சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98-க்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ ரூ.98 திட்டத்தில் அன்லிமிட்டெட் அழைப்புகள், ரோமிங், 140 எஸ்எம்எஸ், 2.1 ஜிபி டேட்டா சுமார் 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ஜியோ மற்றும் ஏர்டெல் சலுகைகளை ஒப்பிடும் போது ஜியோ 20 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்குகிறது. அதே போல் வேலிடிட்டி நாட்களும் கூடுதலாக உள்ளது. மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கப்படுகிறது.


ஏர்டெல் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் டிவி மற்றும் விண்க் மியூசிக் சேவை வழங்கப்படுகிறது. ஏர்டெல் ஜியோவை விட ஐந்து ரூபாய் குறைவாக இந்த சேவையை வழங்குகிறது.


இதில் மேலும் படிக்கவும் :