வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2016 (11:26 IST)

ஃபேஷன் ஷாப்பிங்க்கு முன்னுரிமை அளிக்கும் பிளிப்கார்ட்

ஃபேஷன் ஷாப்பிங்க்கு முன்னுரிமை அளிக்கும் பிளிப்கார்ட்

இந்தியாவின் பிரபல ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட்டின் இணை நிறுவனம் மிந்திரா, ஜபாங் நிறுவனத்தை வாங்கி உள்ளது.


 


கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பிரபல ஆன்லைன் ஃபேஷன் நிறுவனமான ஜபாங் பெரும் வர்த்தக சரிவை எதிர்கொண்டது. இதைத் தொடர்ந்து விற்பனைக்கு வந்த ஜபாங் நிறுவனத்தை மிகுந்த போட்டிக்கிடையில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.

தனது மிந்திரா நிறுவனத்தின் கீழ் ஜபாங் நிறுவனத்தை 70 மில்லியன் டாலர் விலை கொடுத்து ஃபிளிப்கார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம் ஃபேஷன் ஷாப்பிங் வர்த்தக சந்தையில் மிகப்பெரிய கூட்டமைப்பாக இது பார்க்கப்படுகிறது.

ஜபாங் நிறுவனத்தை வாங்க ஸ்னாப்டீல், ஃப்யூச்சர் குரூப், ஆதித்யா பிர்லாவின் ஏபிஓஎஃப்  நிறுவனங்கள் முன் வந்தது குறிப்பிடத்தக்கது.

டோரதி பெர்கின்ஸ், டாப்ஷாப், டாம் தையல்காரர், ஜி ஸ்டார் ரா, புகாட்டி காலணிகள், தி நார்த் ஃபேஸ், ஃபாரெவர் 21, ஸ்வரோவ்ஸ்கி, டிம்வர்லேண்ட் & லகோஸ்டி என சர்வதேச பிராண்டுகளுடன் தற்போது மிந்திரா நிறுவனம் பிரத்தியேக ஆன்லைன் தளமாக இருக்கிறது.

ஜபாங்குடன் இணைந்ததால் மிந்திரா நிறுவனம் 15 மில்லியன் ஆக்டிவ் பயனர்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்