1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2016 (12:45 IST)

வாட்ஸ் ஆப் மூலம் பணம் அனுப்பலாமா? எப்படி?

ஆப்பிள், கூகுள், சாம்சங் போன்ற நிறவனங்கள், மொபைல் வேலெட்களை ஆப்பிள் பே, கூகுள் வேலெட் மற்றும் சாம்சங் பே என பணத்தை டிஜிட்டல் வடிவத்தில் பரிமாற உதவுகிறது.

 
அப்படியாக வாட்ஸ்ஆப் மூலமும் பணம் அனுப்பலாம். அது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
 
1. வாட்ஸ்ஆப் மூலமாக பணம் அனுப்பவும் பெறவும் ப்ரீசார்ஜ் ஆப் (Freecharge App) பதிவிறக்கம் செய்ய வேண்டும். ப்ரீசார்ஜ் ஆப் மொபைல் எண் கொண்டு சைன்-அப் செய்ய, கூகுள் பிளே ஸ்டோரில் பெற முடியும்.
 
2. பின்னர், திரையின் வலது பக்கத்தில் தோன்றும் மோர் ஆப்ஷனை தேர்வு செய்து, 'ப்ரீசார்ஜ் ஆன் வாட்ஸ் ஆப்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
 
3. பின்னர் எனேபிள் என்பதை கிளிக் செய்வதன் மூலம் பயன்பாட்டை அணுகுவதற்கான அனுமதிகள் வழங்கபடும்.
 
4. செட் அப் பணிகள் முடிவுக்கு வந்ததும், வாட்ஸ் ஆப் மூலமாக காண்டாக்ட்டை தேர்வு செய்து பணம் அனுப்பலாம். 
 
பணம் அனுப்ப பின்பற்ற வேண்டிய வடிவமைப்பு: 
 
500 ரூபாயை அனுப்ப விரும்பினால், '500FC' என டைப் செய்து  வாட்ஸ் ஆப் சென்ட் ஐகான் மேல் தோன்றும் ப்ரீசார்ஜ் ஐகானை கிளிக் செய்து பண பரிமாற்றத்தை நிகழ்த்தலாம்.