வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (06:23 IST)

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் ஜி.எஸ்.டி. வரி

ஆன்லைன் வழியாக பொருட்கள் வாங்கினால் அதற்கு ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவைவரி விதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 

 
நாடு முழுவதும் ஒரேவிதமான மறைமுக வரிவிதிப்பு முறையை கொண்டு வர மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி மசோதாவை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி முதல் அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது.
 
இதில் ஆன்லைன் வழியாக பொருட்கள் வாங்கினாலும் அதற்கு ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவைவரி விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக மத்திய வருவாய் துறை செயலாளர் ஹாஸ்முக் ஆதியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மாதிரி சட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தங்கள் யோசனைகளை, கருத்துகளை நிதி மந்திரிகளின் அதிகாரம் வழங்கப்பட்ட குழு செயலகத்துக்கு அல்லது நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.