வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Annakannan
Last Modified: சனி, 25 அக்டோபர் 2014 (21:26 IST)

20 அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

20 அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு (FDI) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.988.3 கோடியாகும். 
 
2014 செப். மாதம் 16ஆம் தேதி நடந்த அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் சந்திப்பில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளின் பேரில் இந்த ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் பரிந்துரையின் பேரில் எட்டு திட்டத்திற்கான ஒப்புதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்து திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதோடு இரண்டு நிறுவனங்களின் திட்டங்களுக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.