வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (16:58 IST)

அறிவிப்பின்றி யூசி பிரவுசரை நீக்கிய கூகுள் ப்ளே ஸ்டோர்!!

மொபைல் பிரவுசர்களில் பிரபலமானது யூசி பிரவுசர். இதனை தற்போது எந்த அறிவிப்பும் இன்றி ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது கூகுள். 


 
 
வேகமாக செயல்படும் என்ற காரனத்தால் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் தவறாமல் இருப்பது யூசி பிரவுசர். சீன ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாதான் இதன் உரிமையாளர்.
 
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இதுவரை 500 மில்லியன் முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது யூசி பிரவுசர். ஆனால், கூகுள் ப்ளே ஸ்டோர் எந்த முன் அறிவிப்பும் இன்றி யூசி பிரவுசரை நீக்கியுள்ளது. 
 
இது தொடர்பாக யூசி பிரவுசர், இன்னும் 30 நாள்களுக்கு யூசி பிரவுசருக்கு ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு, மீண்டும் வழக்கம் போல இடம்பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
யூசி பிரவுசரின் மற்றொரு வெர்ஷனான யூசி பிரவுசர் மினி இன்னும் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து யூசி பிரவுசர் எதற்காக நீக்கப்பட்டுள்ளது என்பதற்காக தெளிவான காரணங்கள் வெளியிடப்படவில்லை.