செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (11:42 IST)

பயன்படாத மொபைல் போனில் இருந்து தங்கம் எடுக்க முடியுமா???

ஆய்வாளர்கள் பழைய மொபைல் போன், தொலைக்காட்சி பெட்டி மற்றும் கணினிகளில் இருத்து தங்கம் எடுக்கும் புதிய, எளிய முறைகளை கண்டறிந்து உள்ளனர்.


 
 
சைனைடு போன்ற நச்சு அடங்கிய இரசாயனம் இருப்பதால் பழைய கருவிகளில் இருந்து தங்கம் எடுப்பது ஆபத்தானது என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் பழைய மொபைல் போன், தொலைக்காட்சி பெட்டி மற்றும் கணினிகளில் உலகின் ஏழு சதவீத தங்கம் மறைந்திருப்பது தெரியவந்திருக்கின்றது. 
 
இதனைத் தொடர்ந்து நச்சு இரசாயனங்களினால் பாதிப்பு ஏற்படாத வகையில் பழைய கருவிகளில் இருக்கும் தங்கத்தை எடுக்க புதிய வழிமுறை வந்துள்ளது. 'புதிய வழிமுறையின் மூலம் தேவையற்ற கருவிகளில் இருந்து விலை மதிப்புடைய தாதுகளை எடுப்பது வணிக ரீதியில் பல்வேறு நன்மைகளை வழங்கும்' என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகளில் இருந்து தங்கத்தை எடுக்கும் வழிமுறையில் பல்வேறு வேதியியல் மற்றும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் நச்சு குறைந்த ஆசிடில் போர்டுகள் வைக்கப்படுகின்றன. இவ்வாறு செய்த பின் இந்த ஆய்வு குழுவினர் கண்டறிந்த வேதியியல் இரசாயனம் சேர்க்கப்படுகின்றது.
 
பின்னர் உடனே சர்க்யூட் போர்டில் இருக்கும் தங்கம் தனியாக வெளியேறி விடும். ஜர்னல் ஆஃப் ஆங்வேண்ட் கெமியில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு பழைய மின் கருவிகளில் இருந்து தங்கத்தை எடுக்கப் பெரிய அளவில் உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.