வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 31 அக்டோபர் 2015 (08:54 IST)

நவம்பர் 5 ஆம் தேதி முதல் தங்கப் பத்திரங்கள் வெளியிடப்படும்: மத்திய நிதியமைச்சகம்

நவம்பர் 5 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிவரை தங்கப் பத்திரங்கள் வெளியிடப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.


 

 
பொதுமக்கள் பத்திர வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யும் வகையில், தங்கப் பத்திரத் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
அந்தத் திட்டத்தின் கீழ், 2 கிராம் தங்கத்தின் மதிப்புடைய பத்திரங்களை மத்திய அரசு வெளியிடுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் அதிகபட்சமாக 500 கிராம் வரையிலான தங்கத்தின் மதிப்புக்கு பத்திரங்களை வாங்கலாம்.

இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
 
தங்கப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 5 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை வழங்கப்படும், இந்த விண்ணப்பங்கள் நவம்பர் 26 ஆம் தேதி ஏற்கப்படும். இந்த பத்திரங்கள் வங்கிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படவுள்ளன.
 
முதல்கட்டமாக இந்தப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. அடுத்தக்கட்ட தங்கப் பத்திர விற்பனைக்கான் தேதிகள் குறித்து அவ்வப்போது அறிவிக்கப்படும். என்று மத்திய நிதியமைச்சத்தின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.