வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 14 மே 2018 (16:18 IST)

ஃபோர்டு நிறுவனத்தின் இரண்டு புதிய கார் அறிமுகம்: விவரம் உள்ளே...

ஃபோர்டு நிறுவனம் இன்று இரண்சு புதிய கார்களை அறிமுகம் செய்துள்ளது. அவை, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிஷன் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் ஆகும். இவற்றை பற்றிய விரிவான தகவல்கள் இதோ...
 
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிஷன்:
 
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிஷன் மாடலில் சன்ரூஃப் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டைட்டானியம் வேரியண்ட்டில் ஆப்ஷனல் மாடலாக வந்துள்ளது. 
 
17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல்கள், புதிய பாடி கிராஃபிக்ஸ், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். உட்புறத்தில் நீல வண்ண அலங்கார பாகங்களும், தையல் வேலைப்பாடு கொண்ட  சீட் கவர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
 
இதன் பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் டிராகன் சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரை வழங்கும். இந்த மாடல் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் தரும்.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்:
 
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் மீண்டும் 1.0 லிட்டர் ஈக்கோஸ்பூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனை வழங்கும். புதிய 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
 
1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. டீசல் மாடல் லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் தரும். இதிலும், சன்ரூஃப் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும், ஹெட்லைட் யூனிட் மற்றும் பனி விளக்குகளுக்கான ஆபரண உதிரிபாகம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
 
விலை பட்டியல்: 
 
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிஷன்:
பெட்ரோல் எஞ்சின்: ரூ. 1,040,400 
டீசல் எஞ்சின்: ரூ. 1,099,300
 
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்:
பெட்ரோல் எஞ்சின்: ரூ. 1,137,300
டீசல் எஞ்சின்: ரூ. 1,189,300