ஃபோர்ட் நிறுவனம்: ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 27 அக்டோபர் 2017 (20:17 IST)
ஃபோர்டு நிறுவனத்தின் சப்-காம்பாக்ட் SUV மாடலன இகோஸ்போர்ட் புதிய எடிஷன் நவம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

 
 
புதிய ஃபோர்டு இகோஸ்போர்ட் வெளியாக இருப்பதை தொடர்ந்து தற்போதைய இகோஸ்போர்ட் மாடல் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
அதன்படி குறிப்பிட்ட இகோஸ்போர்ட் மாடல் கார் ரூ.1,00,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. அதோடு சலுகைகள், எக்சேஞ்ச் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
 
இந்தியாவில் ஃபோர்டு இகோஸ்போர்ட் மாடல்களின் விலை தற்சமயம் ரூ.7.31 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
 
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை ஸ்டாக் இருப்பு இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :