வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 அக்டோபர் 2016 (14:51 IST)

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே: ஒரே நாளில் 1,400 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்கள் விழாக் கால சலுகைகளை வழங்கி வரும் நிலையில் திங்கட்கிழமை ஒரு நாளில் மட்டும் 1400 கோடி ரூபாய்க்குப் விற்பனை செய்து பிளிப்கார்ட் சாதனை படைத்துள்ளது.

 
ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்ட பிக் பில்லியன் டே விற்பனையைத் தொடர்ந்து பிளிப்கார்ட் இணையதளத்திற்கு வழக்கத்தை விட ஐந்து மடங்கு டிராஃபிக் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
இந்த வருடாந்திர விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களை விற்பதற்காக பல முன் ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளன.
 
விற்பனை, மற்றும் பொருட்கள் பிரிவுகளில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும், துறை சார்ந்த நிபுணர்கள் விற்பனையை கவனித்துக் கொண்டதாகவும் இதனால் பல புதிய பிரிவுகளில் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்ய முடிந்ததாகவும் பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்த ஆண்டு இணைய சில்லறை வணிகர்களுக்கும்,  வாடிக்கையாளர்களுக்கும் பல சலுகைகளை வழங்கி வருகின்றனர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாக 40 மில்லியன் பொருட்களை பிளிப்கார்ட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அமேசான் நிறுவனம் 2015 ஆம் ஆண்டை விட மூன்று மடங்க அதிகமாக 80 மில்லியன் பொருட்களை விற்பனை செய்து உள்ளது.
 
ஸ்மார்போன்கள் பிரிவில் அதிகம் விற்பனை செய்துள்ள பிளிப்கார்ட் நிறுவனம் சென்ற வருடம் பிக் பில்லியன் டேவில் ஐந்து நாட்களிலும் சேர்த்து 2,000 கோடிக்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.