வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2017 (20:07 IST)

ஜீரோ காஸ்ட் ஸ்மார்ட்போன்: ரீசார்ஜ் பேக்குகள் மற்றும் சிறப்பம்சங்கள்!!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இலவசமாய் 4ஜி மொபைல் போன்கள் வழங்கப்படவுள்ளன என அறிவித்தார். 


 
 
ரூ.1,500 வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். ஆனால் இந்த தொகை 3 ஆண்டுகளில் திரும்பத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புக்கிங் வரும் ஆகஸ்ட் 24 முதல் தொடங்க உள்ளது. 
 
சிறப்பு அம்சங்கள்
 
# பேசிக் மாடல் மொபைல்களில் இருப்பது போன்ற ஆங்கில எழுத்துக்கள் மற்றும் நம்பர்களுடன் கூடிய கீபேட்.

# 2.4 இஞ்ச் டிஸ்பிளே, எஃப்எம், டார்ச் லைட் வசதியும் இந்த போனில் உள்ளது.
 
# ஹெட்ஃபோன் ஜாக் வழங்கப்படும், மெமரி கார்டு ஸ்லாட் இருக்கும். 
 
# நான்கு வழி நேவிகேஷன் சிஸ்டம், ஜியோ போனின் செயலிகளும் இந்த மொபைல் போனில் இடம்பெற்றுள்ளது.
 
# மைக்ரோ போன் மற்றும் ஸ்பீக்கரும் இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளது. 


 

 
ரீசார்ஜ் திட்டங்கள்:
 
ஜியோ தண் தணா தண் ஆஃபர் மூலம் மாதம் ஒருமுறை ரூ.153-க்கு ரீசார்ஜ் செய்தால் வாய்ஸ் கால்கள், மெசேஜ், மற்றும் டேட்டா என அனைத்தும் அன்லிமிடெட்டாக கிடைக்கும். மேலும், 54 மற்றும் 24 ரூபாய்க்கு ரீசார்ஜ் பேக்குகளையும் அறிமுகம் செய்துள்ளது.