வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (20:34 IST)

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.75 சதவீத வட்டி நிர்ணயம்

தொழிலாளர் வருங்கால வைப்பு ‌நிதிக்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 8.75 சதவீத வட்டி வழங்கப்படும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.) அறிவித்துள்ளது.
 
டெல்லியில் இன்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்ற இ.பி.எப்.ஓ. வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 
நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்தபிறகு இந்த வட்டிவிகிதம் அமலுக்கு வரும். இதன்மூலம் நாடு முழுவதிலும் உள்ள 5 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
 
காப்பீடு இணைந்த வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அதிகபட்ச காப்புறுதி தொகையை ரூ.1.56 லட்சத்தில் இருந்து ரூ.3.6 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்று பி.எப். ஆணையர் தெரிவித்தார்.