வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 27 ஜூன் 2015 (09:16 IST)

மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

உலக பொருளாதாரம் மீண்டும் பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், லண்டன் நகரில் உள்ள லண்டன் வர்த்தக கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது அவர் பேசுகையில், "நாம் வளர்ச்சியை செயல்படுத்துவதற்காக முயற்சித்தபோது, 1930 களில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
 
அதே போன்றதொரு நிலைமைக்குள் இப்போது மெதுவாக சென்று கொண்டிருக்கிறோம் என்பது கவலை அளிக்கிறது. இது உலகத்துக்கே பிரச்சினை என்றுதான் கருதுகிறேன்.
 
இது தொழில்வளம் கண்ட நாடுகளுக்கு அல்லது சந்தைகளை கொண்டுள்ள நாடுகளுக்கு ஆன பிரச்சினை மட்டுமல்ல. இது பரந்து விரிந்தது" என்று கூறினார்.
 
இதற்கு ஒரு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு அவர் உலகமெங்கும் உள்ள மத்திய வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
 
கடந்த 2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதை ரகுராம் ராஜன் முன்கூட்டியே கணித்துக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று ரகுராம் ராஜன் பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத்ப்படுகிறது.