Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிரெடிட் கார்ட் பில் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுமா??


Sugapriya Prakash| Last Updated: சனி, 8 ஜூலை 2017 (16:24 IST)
கிரெடிட் கார்டு கட்டணங்கள், மொபைல் மற்றும் தொலைபேசி பில்களுக்கு 18 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. 

 
 
இந்நிலையில் ஜூன் மாதம் வரயிலான கிரெடிட் கார்டு பில்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த தேவை இல்லை என வருவாய்த்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
ஜூன் மாதத்தில் செலுத்த வேண்டிய கிரெடிட் கார்டு  கட்டணங்களுக்கான தேதிகள் ஜூலை மாதத்தில் வருகின்றன. எனவே, ஜுன் மாதத்துக்கான கட்டணங்களுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.
 
எனவே, ஜூன் மாதத்துக்கான கிரெடிட் கார்டு, மொபைல் மற்றும் தொலைபேசி சேவைகளுக்கான கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. சேவை வரி மட்டும் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :