வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 15 நவம்பர் 2014 (15:45 IST)

சலுகைத் திட்டங்களை கடனாளிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனர் - ரகுராம் ராஜன்

கிராமப்புற வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், சலுகைத் திட்டங்களை கடனாளிகள் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றஞ் சாற்றினார்.
 
கிராமப்புற வளர்ச்சி வங்கியான நபார்டு சார்பில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில்  ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டார்.
 
அந்தக் கூட்டத்தில் பேசுகையில், ‘மாநில அரசுகள் தொடர்ச்சியாக கடன் தள்ளுபடித் திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் இதன் எதிரொலியாக சந்தை சமநிலை பாதிக்கப்படுவதாக‘ ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
 
மேலும், ‘அரசுகளின் வட்டி மானியம் மற்றும் கடன் தள்ளுபடி சலுகைகள் விவசாயிகளுக்கு உடனடியாக குறைந்த அளவில் நிவாரணம் தந்தாலும் நீண்ட கால நோக்கில் அவர்களுக்கு அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே உண்மை‘ என்றும், ‘விவசாயிகள் ஒரே பயிரின் மீது 5 முறை கடன் பெறும் போக்கு உள்ளது‘ என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.