செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 9 ஜனவரி 2016 (11:41 IST)

சீன கரன்ஸியின் மதிப்புக் குறைப்பு இந்திய ஏற்றுமதியை பாதிக்கும்: வர்த்தகத் துறை அமைச்சர்

சீனா தனது நாட்டின் கரன்ஸியான யுவான் மதிப்பைக் குறைத்துள்ளது, இது, இந்திய ஏற்றுமதியை பாதிக்கும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


 

 
டெல்லியில், நடைபெற்ற வர்த்தக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் கூட்டத்தில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
 
பின்னர், செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "கடந்த 2014-15 நிதி ஆண்டில் சீனா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தகம் 7,230 கோடி டாலராக இருந்தது.
 
அதேசமயம், வர்த்தகப் பற்றாக்குறை 4,900 கோடி டாலராக காணப்பட்டது. இந்திய ஏற்றுமதித் துறைக்கு சீனா முக்கிய சந்தையாக உள்ளது.
 
குறிப்பாக, வேளாண் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, மற்றும் மருந்துத் துறை ஏற்றுமதிக்கு முக்கிய சந்தையாக உள்ளது, 
 
இந்நிலையில், சீனா கரன்ஸியின் மதிப்பான யுவான் மதிப்பை குறைத்துள்ளது. இது இந்திய ஏற்றுமதிப் பொருட்களின் விலையை மேலும் பாதிக்கும். அதேசமயம், சீனாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதி பொருட்களின் விலை மிகவும் குறையும்". என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.