வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 5 நவம்பர் 2014 (19:27 IST)

தங்கம் சவரன் ரூ.19,376-க்கு விற்பனை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,422-க்கும் சவரன் ரூ.19,376-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
 
கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தங்கத்தின் விலை 20,000 ரூபாய்க்கு கீழே செல்ல தொடங்கியது. அதனை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதி ரூ.19,760-ஆகவும், நவம்பர் 2 ஆம் தேதி இந்த விலையில் 88 ரூபாயும், நவம்பர் 4 ஆம் தேதி 16 ரூபாயும் குறைந்து இருந்தது. இன்று தங்கத்தின் விலை மேலும் அதிரடியாக குறைந்துள்ளது.
 
நகை கடையில் வந்து நகை வாங்கும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.36.80-க்கும் வெள்ளி கட்டி (கிலோ) ரூ.34,360-ஆகவும் உள்ளது.