Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சட்டத்தை மீறிய ஜியோ மற்றும் பே.டி.எம்: மத்திய அரசு தீடீர் செக்!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (10:33 IST)
ஜியோ மற்றும் பே.டி.எம் நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தினை பயன்படுத்தியது. 

 
 
இந்நிலையில் இது பெரும் சர்ச்சையாகி, அதற்கு தகுந்த விளக்கம் வழங்க வேண்டுமென்று அந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
 
195௦ல் வெளிவந்த சட்டத்தின் படி இதுபோன்ற அடையாளங்களை வணிக நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது. எனவே சட்டத்தை மீறி விளம்பரத்திற்கு மோடியின் புகைப்படம் பயன் படுத்தியதை அடுத்து இரண்டு நிறுவனங்களுக்கும் கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
கடந்த செம்டம்பர் மாதம் ஜியோ நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் வெளியான பண மதிப்பிழப்பு போது பேடிஎம் நிறுவனம் அதன் விளம்பரத்தில் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்து மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதாக ஆரசியல் கட்சிகள் மோடியை கடுமையாக விமர்சித்தனர். 


இதில் மேலும் படிக்கவும் :