தினமும் 2ஜிபி இலவசம்: பி.எஸ்.என்.எல். அதிரடி


Abimukatheesh| Last Updated: வியாழன், 16 மார்ச் 2017 (20:41 IST)
பி.எஸ்.என்.எல். புதிதாக ரூ.339 திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் தினமும் 2ஜிபி 3G டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட சேவைகள் பெற முடியும்.


 

 
ஜியோவுக்கு போட்டியாக மற்ற அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் அதிரடி சலுகை வழங்க போட்டிப்போட்டு களத்தில் இறங்கியுள்ளானர். அந்த வகையில் ஏர்டெல் மற்றும் வோடாபொன் நிறுவனங்கள் 28ஜிபி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் கொண்ட வேசையை அறிமுகம் செய்தனர்.
 
தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது. அதன்படி ரூ.339 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி 3G டேட்டா மற்றும் பிஎஸ்என்எல் எண்களுக்கு மட்டும் அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. மற்ற நெட்வொர்க்களுக்கு நாள் ஒன்றிற்கு 25 நிமிடங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்பிறகு 1 நிமிட அழைப்பிற்கு 25 பைசா வசூலிக்கபடும் என தெரிவித்துள்ளது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :