செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (11:11 IST)

ஏடிஎம், செக்புக் அனைத்திற்கும் இனி கட்டண சேவை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...

வங்கி வாடிக்யாளர்களுக்கு பேரிடி ஒன்று காத்திருக்கிறது. ஆம், இதுவரை வங்கிகள் வழங்கிய சில இலவச சேவைகள் அனைத்தும் இனி கட்டண சேவைகளாக மாற்றப்பட உள்ளன. 
 
வரி துறையிடம் இருந்து எச்டிஎப்சி, ஆக்சிஸ், எஸ்பிஐ மற்றும் கோடாக் மகேந்திரா வங்கி என அனைத்து முக்கிய வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த இலவச சேவைகளுக்கான வரியை செலுத்த வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
அதாவது, இதனால் வங்கிகள் ஏடிஎம், செக்புக் என இலவசமாக அளித்து வந்த சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இலவச பரிவர்த்தனைகளுக்கு இனி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
அதோடு இல்லாமல் முந்தைய 5 வருடங்களுக்கு சேர்த்து வங்கிகள் வரி செலுத்த வேண்டும் என்றும் வரி துறை கூறியிருக்கிறதாம். வங்கிகள் இலவச சேவைகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்னும் பட்சத்தில் வரி தொகையானது ரூ.6,000 கோடி வரை இருக்கும்.
 
இது குறித்து வங்கி நிர்வாகிகள் மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாவிட்டால் அதாவது அரசு அரசு வரி செலுத்த வேண்டும் என்று கூறிவிட்டால் மக்களிடம் வரி வசூலிக்கப்படுமாம். 
 
வங்கிகள் சேமிப்பு / நடப்பு கணக்குகளில் (saving A/C, current A/C)  இருந்து பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது, ஏடிஎம் இலவச பரிவர்த்தனை என அனைத்து இலவச சேவைகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுமாம்.