செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (12:02 IST)

வங்கி கடன்களுக்கான வட்டியை 1/2 சதவிகிதம் குறைத்தது ரிசர்வ் வங்கி

வங்கி கடன்களுக்கான வட்டி அரை சதவிகிதம் குறைக்கப்பகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில், இந்த நிதியாண்டிற்கான நிதிக் கொள்கை மீதான மறுஆய்வுக் கூட்டம்,  மும்பையில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில், ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் குறுகிய காலக் கடன் வட்டியான ரெப்போ விகிதத்தை 1/2 சதவிகிதம் குறைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, 7.25 சதவிகிதமாக உள்ள கடன் வட்டி 6.75 சதவிகிதமாக குறைந்துள்ளது.
 
இந்த வட்டி குறைப்பு காரணமாக, ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் செலுத்த வேண்டிய வட்டி குறையும் என்பதால், வீடு, வாகனம் மற்றும் தொழில் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதம் 4 சதவிகிதமாக நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.