1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (09:26 IST)

அனைத்து படிவங்களிலும் மூன்றாம் பாலினத்தையும் சேர்க்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

மூன்றாம் பாலினத்தை அனைத்து படிவங்களிலும் சேர்க்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
 
சென்ற ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின சட்ட அங்கீகாரம் அளித்து உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. இருப்பினும் மூன்றாம் பாலினம் என்ற அடையாளம் பொதுவெளியிலும் அரசு ஆவணங்களிலும் திருநங்கைகளுக்கு மறுக்கப்பட்டே வந்தது.

குறிப்பாக வங்கிக் கணக்கு தொடங்குவதில் இருந்து அனைத்து அரசு சார் நடைமுறைகளிலும் தங்களுக்கான அடையாளம் இல்லாத காரணத்தால் அவர்கள் வருத்தம் கொண்டனர். 
 
இந்நிலையில், வங்கிக் கணக்கு தொடங்குவது மற்றும் வங்கி தொடர்பான சேவைகளை திருநங்கைகளும் பெறும் வகையில் வங்கிகள் தங்களது அனைத்து விதமான படிவங்களிலும் ஆண், பெண் என்ற தேர்விற்கு அடுத்தபடியாக மூன்றாம் பாலினம் என்ற தேர்வையும் உருவாக்க வேண்டுமென மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.