வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2015 (15:05 IST)

உலக வங்கிக்கு போட்டியாக புதிய வங்கி உதயம்?

ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கி எனும் பெயரில் புதிய வளர்ச்சி வங்கி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன அதிபர் ஷீ ஜின் பிங் வர்ணித்துள்ளார்.

பீஜிங்கில் அந்த வங்கியின் தொடக்கத்தை குறிக்கும் வகையிலான கையொப்பமிடும் நிகழ்வின்போதே இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.

அந்த வங்கியில் மிகப் பெரிய முதலீட்டாளராக சீனா உள்ளது. அதை அடுத்து இந்தியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.

அந்த வங்கியின் நிர்வாகத் தரம் குறித்து கவலைகள் உள்ளன என்று கூறி அமெரிக்காவும் ஜப்பானும் அதில் இணைய மறுத்துள்ளன.

இந்தப் புதிய வங்கி உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிக்கு போட்டியாக இருக்கக் கூடும் என பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.