1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 11 நவம்பர் 2017 (14:38 IST)

மன்னிப்பு கேட்க தயக்கமா? வந்தாச்சு SORRY ஆப்!!

பிறரிடம் மன்னிப்பு கேட்க தயக்கம் உடையவர்கள், பிறரிடம் மன்னிப்பு கேட்க நினைப்பவர்களுக்கு SORRY என்னும் புதிய ஆப் ஒன்று வெளியாக உள்ளது. 


 
 
இணையதள வளர்ச்சி சர்வதேச வளர்ச்சியை அடைந்துள்ளது. நமது அன்றாட பணியை எளிமையாக்க தினமும் பல ஆப் அறிமுகம் செய்யப்படுகிறது.
 
அந்த வகையில் மன்னிப்பு கேட்ட புதிய ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்படயுள்ளது. Greta Van Susteren என்பவர் இந்த ஆப்பை வெளியிட உள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
SORRY என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப் Accept மற்றும் Reject என இரு வசதிகளை மட்டுமே கொண்டது. ஒருவர் நம்மிடம் மன்னிப்பு கேட்பதை எற்பதாக இருந்தால் Accept என்பதை பயன்படுத்தாலாம், நிராகரிக்க வேண்டிய நேரத்தில் Reject பயன்படுத்தாலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்கப்படும் மன்னிப்பு ரகசியமாக வைக்கப்படும். வேண்டுமென்றால் இதனை அனைவரும் பாத்துக்கொள்ளும் வகையில் மாற்றிக்கொள்ளாம். 
 
நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஆகிவரிடமும் மன்னிப்பு கேட்கும் வசதியும் இதில் உள்ளதாம். வரும் 14 ஆம் தேதி இந்த ஆப் வெளியிடப்படயுள்ளது.