வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2016 (17:09 IST)

இணையும் அம்பானி சகோதரர்கள்..... ஏர்டெல்லின் நிலை அம்பேல்

அம்பானி சகோதரர்கள் பிளவுக்குப் பின்னர் மீண்டும் இணையவுள்ளனர். அதாவது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இரண்டும் இணைய உள்ளன. 

 
திருபாய் அம்பானியின் மரணத்திற்கு பிறகு, தொலைத் தொடர்பு வர்த்தகம், நிதி சேவைகள் அனில் அம்பானியின் கைக்குல் வந்தது. எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பிசினஸில் அவரது மூத்த சகோதரரான முகேஷ் அம்பானியின் கீழ் வந்தது.
 
ஆனால் தற்போது, எங்கள் 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்காகவும், 1 மில்லியன் விற்பனையாளர்களுக்காவும் மற்றும் பார்ட்னர்களுக்காவும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் ஜியோ (ஆர்.காம், ஜியோ) இரண்டு நிறுவனங்களும் இணைய உள்ளதாக அனில் அம்பானி தெரிவித்தார்.
 
மேலும், எங்களது ஸ்பெக்ட்ரம், ஃபைபர், கோபுரங்கள், நெட்வொர்க் ஆகிய அனைத்தும் பகிரப்படும் எனவும் தெரிவித்தார்.
 
ஏற்கனவே, ஏர்செல் நிறுவனத்துடன் கைகோர்த்த ஜியோ தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உடன் சேரவிருப்பதால், ஏர்டெல், வோடோபோன், ஐடியா போன்ற முன்னனி தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிலை கேள்வி குறியாகி உள்ளது.