Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமேசான் சம்மர் சேல்: ஸ்மார்ட்போன் மீது 35% வரை தள்ளுபடி...

Last Updated: வெள்ளி, 11 மே 2018 (11:30 IST)
அமேசான் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக உள்ளது. அமேசான் தளத்தில் தற்போது சிறப்பு சலுகை விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் சம்மர் சேல் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 
 
இந்த சிறப்பு விற்பனை மே 13 ஆம் தேதி துவங்கி மே 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு சலுகையில், ஸ்மார்ட்போன், மின்சாதனங்கள், தொலைகாட்சிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. 
 
அமேசான் சம்மர் சேல் விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் 35% தள்ளுபடி வழங்கப்படுகிரது. ஹானர் 7X, நோக்கியா 7 பிளஸ், ரியல்மி 1 ஸ்மார்ட்போன் சிறப்பு விற்பனைக்கு வர இருக்கிறது. 
ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களுக்கு 80% தள்ளுபடியும், அனைத்து மாடல் மொபைல் போன் கேஸ்களுக்கும் 75% தள்ளுபடியும், ப்ளூடூத் ஹெட்செட் சாதனங்களுக்கு 35%, பவர் பேங்க் சாதனங்களுக்கு 70% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
 
விலை குறைப்பு, தள்ளுபடி மட்டுமின்றி வட்டியில்லா மாத தவனை முறை, கேஷ்பேக் மற்றும் எக்சேஞ்ச் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :