1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 18 நவம்பர் 2016 (17:11 IST)

ரூபாய் நோட்டு மாற்றம்: கூட்டணி அமைக்கும் ஆன்லைன் நிறுவனங்கள்!!

Snapdeal ஆன்லைன் நிறுவனமும் freecharge மொபைல் அப்ளிகேஷனும் கூட்டணி அமைத்து ரூபாய் நோட்டு தட்டுபாடை தவிர்த்து வருகிறது.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கும் மக்கள் முந்திக்கொண்டிருக்கின்றனர். 
 
இந்நிலையில், மக்களின் திண்டாட்டத்தைக் குறைக்கும் வகையில், Freecharge மொபைல் அப்ளிகேஷன் Wallet on Delivery என்ற புதிய சேவையை அளித்து வருகிறது. 
 
இதன் மூலம் இணைய வர்த்தக நிறுவனங்களில் Cash On Delivery மூலம் பொருட்களை வாங்குபவர்கள் Freecharge மூலம் பொருட்களுக்கான தொகையை செலுத்திவிடலாம். 
 
இந்நிலையில் ரூபாய் நோட்டுத் தடைக்குப் பிறகு, Snapdeal இணையதளம் மூலம் பொருட்கள் வாங்கிய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், Wallet on Delivery வசதியை பயன்படுத்தி பணத்தை செலுத்தியுள்ளதாக Freecharge நிறுவனம் தெரிவித்துள்ளது.