1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (18:24 IST)

இந்தியாவில் முதலீடுகளை தவிர்க்கும் அலிபாபா ஜாக் மா: காரணம் என்ன?

சீன நிறுவனமான அலிபாபாவின் தலைவர் ஜாக் மா இந்தியாவில் முதலீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளாராம். 
 
இந்திய சந்தையின் முக்கிய முதலீட்டாளராக பார்க்கப்படும் ஜாக் மா, இந்தியாவின் பேடிஎம் மற்றும் சோமேட்டோ நிறுவனங்களில் முதலீடுகளை செய்தது. அதன் பின்னர் மேலும் சில நிறுவனங்களிலும் முதலீடுகளை போட்டது.
 
இந்நிலையில் தற்போது முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து ஜாக்மாவிற்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர் இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிகிறது. 
 
ஆனால், சில தரப்போ பேடிஎம் மற்றும் சொமேட்டோவில் வளர்ச்சி கண்ட முதலீடுகள் ஸ்நாப் டீல் மற்றும் பேடிம் மால் ஆகிவற்றின் மூலம் கவிழ்ந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றன.