5 ஜிபி இலவச டேட்டா: ஏர்டெல் அதிரடி ஆஃபர்!!

Last Updated: ஞாயிறு, 7 ஜனவரி 2018 (14:38 IST)
ஏர்டெல் போஸ்ட்பெயிட் அல்லது டிடிஎச் இணைப்புகளை பயன்படுத்தும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் மை ஹோம் ரிவார்ட்ஸ் திட்டத்தின் புதிய சலுகை வழங்கப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக இந்த திட்டத்தில் ஒரு இணைப்பிற்கு 5 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்பட்டு. அதன்பின்னர், 10 ஜிபியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 ஜிபி டேட்டா இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.


இதனை ஏர்டெல் வழங்கும் மை ஏர்டெல் செயலி மூலம் பெற முடியும். ஏர்டெல் வழங்கும் கூடுதல் டேட்டா ஒவ்வொரு வட்டாரத்திலும் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :