Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜியோவை மிஞ்சிய ஏர்டெல்: ஒருவருடத்திற்கு இலவசம்


Abimukatheesh| Last Modified புதன், 4 ஜனவரி 2017 (22:03 IST)
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனம் ஜியோவுக்கு எதிராக தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள ஒருவருடத்திற்கு இலவச சேவைகளை அறிவித்துள்ளது.

 

 
 
ஏர்டெல் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 3 GB அளவிலான 4G டேட்டாவை இந்த ஆண்டின் இறுதி வரை இலவசமாக வழங்குகிறது. இது மற்ற நெட்வொர்க்குகளிலிருந்து பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் ஏர்டெலுக்கு மாறுவோருக்கும், 4Gக்கு அப்கிரேடு ஆகும் ஏர்டெல்லின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும், இந்த சேவை வழங்கப்படுகிறது.
 
டிசம்பர் 4ஆம் தேதிக்கு முன்னதாக ஜியோ வாங்கியவர்களுக்கு, இலவச வழங்கப்பட்டு வரும் சேவையில் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது இலவச சேவையை அதிகரித்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :