Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐபிஎல் 2018: நேரடி மோதலில் ஜியோ, ஏர்டெல்!

Last Updated: சனி, 7 ஏப்ரல் 2018 (12:45 IST)
ஐபிஎல் போட்டி இன்று முதல் துவங்கவுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டி மும்பையில் நடைபெறுகிறது. சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டியில் மோதுகின்றன. வழக்கத்துக்கும் அதிகமாக இந்த ஐபிஎல் மீது அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
இந்த ஐபிஎல் போட்டி மூலம் ஜியோ மற்றும் ஏர்டெல் நேரடி மோதலில் ஈடுப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டியை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது, ஐபிஎல் போட்டிகளுக்காக சிறப்பு சலுகைகள் வழங்குவது போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ளது. 
 
ஏர்டெல் நிறுவனத்தின் பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் செயலியான ஏர்டெல் டிவி, ஹாட்ஸ்டார் உடன் இணைந்து கிரிகெட் போட்டித்தொடரின் அனைத்து போட்டிகள் மற்றும் போட்டியின் சிறப்பு நிகழ்வுகளை நேரலையில் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யும் வசதியை வழங்க உள்ளது.  
இதனால், ஏர்டெல் போன்று ஜியோவும் MIMO பிரீ-5ஜி தொழில்நுட்பத்தை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 2018 கிரிகெட் தொடரில் இந்த தொழில்நுட்பம் கொண்டு அதிவேக இண்டர்நெட் வழங்க இந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
 
அந்த வகையில் ஐபிஎல் கிரிகெட் போட்டிகள் நடைபெற இருக்கும் கிரிகெட் மைதானங்களில் இந்த தொழில்நுட்பம் நிறுவப்பட இருக்கிறது. சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, மொகாலி, இன்டூர், ஜெய்பூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள மைதானங்களில் இந்த தொழில்நுட்பம் நிறுவப்படுகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :