வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2016 (11:16 IST)

அஞ்சலகச் சேமிப்புக் கணக்குகள்: அறிய வேண்டிய ஐந்து

அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசால் வடிவமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப் படுகின்றது. இது பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள் பொதுவாகவே வருமானத்திற்கு உத்தரவாதமளிப்பதுடன் வருமானத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்கிறது.


 
 
கணக்குகள் மற்றும் பத்திர இடமாற்றம்: 
 
கணக்குகளை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ள விரும்பும் நபர்கள் எஸ்பி10(பி) படிவத்தைப் பூர்த்திச் செய்து அல்லது நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். அதை அஞ்சலகத்திலோ அல்லது மாற்ற விரும்பும் இடத்திலுள்ள அலுவலகத்திலோ செய்யலாம். இதற்கான மாற்றுச் சான்றிதழ்களுக்கு என்சி32 படிவத்தை முதலீட்டாளர் பூர்த்திச் செய்து ஏதாவது ஒரு அஞ்சலகத்தில் கொடுக்கலாம்.
 
தூங்கும் கணக்குகள்:
 
சேமிப்புக் கணக்கில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களாகப் பரிவர்த்தனைகள் இல்லாத போது அது தூங்கும் கணக்காக (சைலண்ட் அக்கவுண்ட்) கருதப்படுகிறது. இந்தக் கணக்கை நடைமுறைப்படுத்த விண்ணப்பிக்க வேண்டும். இதில் இருப்புள்ள தொகை குறைந்தபட்ச அளவிற்கும் குறைவாக இருந்தால் 20 ரூபாய் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
 
சான்றிதழ் நகல்கள்:
 
தொலைந்துபோன, திருடப்பட்ட, அழிந்த அல்லது சேதமடைந்த சான்றிதழ் நகல்களைப் பெற முதலீட்டாளர் அஞ்சலகத்தில் என்சி29 படிவத்தைக் கொடுத்து நகல்களைப் பெற வேண்டும். இந்தப் படிவத்தில் சான்றிதழ்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து ஒரு பிரமாணப் பத்திரத்தையும், சில சாட்சிகளையும் சேர்த்து கொடுக்க வேண்டும். அல்லது வங்கி உத்திரவாதத்தையும் கொடுக்கலாம்.
 
இறப்பின் போது கணக்கிலுள்ள தொகையைப் பெற:
 
கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அவருடைய முன்மொழிவு செய்யப்பட்டவர் அல்லது சட்டப்படியான வாரிசு அந்தக் கணக்கில் உள்ள பணத்திற்கு உரிமை கோரலாம். முன்மொழிவு செய்யப் பட்டிருந்தால் அதிலுள்ள நபர் அதற்கான படிவத்தை நிரப்பி இறப்புச் சான்றிதழுடன் அளிக்க வேண்டும். முன்மொழிவு செய்யப்படவில்லை என்றால் யாரவது ஒரு வாரிசு அதனை எஸ்பி84 படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்கலாம். இதனுடன் அனைத்து சட்டப்படியான வாரிசுகளின் இசைவும் இறப்புச் சான்றிதழும் தேவைப்படும். இதில் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான தொகை பெறமுடியும். அதற்கு மேலான தொகைக்குச் சட்ட ஆவணங்கள் மூலம் அதாவது உயில் அல்லது சொத்துரிமை தொடர்பான ஆவணங்கள் மூலம் பெறலாம்.
 
இளையவர் கணக்கு (மைனர் அக்கவுண்ட்):
 
இந்தக் கணக்கை ஒரு இளவரின் பெயரில் தொடங்க முடியும். 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதைத் தொடங்க இயலும்.