வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 21 ஜூன் 2015 (10:04 IST)

10 சதவீத பொருளாதார வளர்ச்சி சாத்தியமானதே: அருண் ஜேட்லி

10 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டமுடியாதது அல்ல என்பதை பொருளாதர சீர்திருத்தங்கள், கொள்கை மாற்றத்துடன் சேர்ந்த நல்ல பருவமழை ஆகியவற்றை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
 
அமரிக்க முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் 9 நாட்கள் சுற்றுப்பயணமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்கா சென்றுள்ளார்.
 
இது குறித்து அருண் ஜேட்லி  நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது:-
 
10 சதவீத பொருளாதார வளர்ச்சி சாத்தியமானதே.  இந்தியாவில் அதற்கான  ஆற்றல் உள்ளது. கடந்த ஆண்டு கடுமையான பருவமழை பற்றாக்குறை இருந்த போதிலும் 7 சதவீத வளர்ச்சியை இந்தியா எட்டியது.
 
அதேபோல் இந்த ஆண்டும் பயிர்ச்சேதம் இருந்த போதும் 7 சதவீதம் வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. உற்பத்தி துறையில் வளர்ச்சி மெதுவாக ஊர்ந்தே செல்கிறது. அதன் வளர்ச்சி 5 சதவீதமாக மட்டுமே உள்ளது.
 
தற்போது, உட்கட்டமைப்பு துறைகளில் அதிக அளவில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அரசும் உற்பத்தி துறைக்கு உதவி அளிக்கும் வகையில் தனது நிதி கொள்கையை அமைத்துள்ளதால், குறிப்பிடத்தக்க வளர்ச்சி இந்த துறையில் சாத்தியமானதே. இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.