சமையல் எரிவாயு விலை ரூ.220 உயர்வு

Webdunia|
FILE
புதுடில்லி : வீடுகளுக்கு வழங்கப்படும் மானியம் அல்லாத சிலிண்டரின் விலையை ரூ.220ம், வணிக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையை ரூ.350-ம் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

மானியமாக வழங்கப்படும் 9 சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வீடுகளுக்கு வழங்கப்படும் மானியமல்லாத சிலிண்டரின் விலை ரூ.1241 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.1660ல் இருந்து ரூ.2013 ஆக உயர்ந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :