வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. ஹோலி ஸ்பெஷல்
Written By

உற்சாகமாக கொண்டாடப்படும் வண்ண திருவிழா ஹோலி பண்டிகை

நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே மக்கள்  ஹோலியை கொண்டாடி வருகின்றனர். 
வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசியும், ஆடிப்பாடியும், இனிப்புக்கள் வழங்கியும் மக்கள் தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தி  வருகின்றனர். மக்கள் ஆடிப்பாடி ஹோலியை கொண்டாடி வருகின்றனர். வண்ண நீரை பாய்ச்சியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
 
இந்துக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஹோலியும் ஒன்று. இந்த ஹோலி பண்டிகை பெரும்பாலும் வட இந்தியாவில் தான் கொண்டாடப்படும். இந்த  பண்டிகையின் சிறப்பு என்னவென்றால், ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக் கொண்டு விளையாடுவது  தான். இதனை ஒரு வசந்த கால பண்டிகை என்றும் சொல்லலாம். இந்த பண்டிகையின் கொண்டாட்டத்தின் போது வண்ணப் பொடிகள் படாமல், இருக்க பலரும்  முயற்சிப்பர். இருப்பினும் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதில் பெரியவர்கள், சிறியவர்கள் என்ற பாரபட்சமின்றிஅனைவரும் வண்ணப்பொடிகளை  பூசியும், வண்ண நீரை பாய்ச்சியும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.