புவி வெப்பமடைதல் சந்தேகவாதி மனம் மாறினார்

Webdunia|
புவிவெப்பமடைந்து வருகிறது நாடுகளின் உற்பத்தி நடவடிக்கைகளால் வெப்பவாயுக்கள் விண்வெளியில் கடுமையான பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்ற எந்த வித விஞ்ஞான ஆய்வுகளையும் நம்பாமல் பேசி வந்த சந்தேகவாதியான டென்மார்க் பேராசிரியர் ஜான் லோம்பர்க் புவி வெப்பமடைதல் உண்மையே என்றும் ஆண்டுக்கு 100பில். டாலர்கள் இதனை தடுக்க செலவு செய்ய வேண்டும் என்றும் தனது புதிய நூலில் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த திடீர் மன மாற்றத்தினால் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான செயல் அறிவு ஜீவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விஞ்ஞானத் தரவுகள் இவர் எழுப்பிய அதிரடி சந்தேகங்களும், கேள்விகளும் ஐ.நா. வானிலை மாற்றத் தலைவர் பச்சௌரியை அதிர்ச்சியடையச் செய்ததோடு லோம்பர்கை அடால்ஃப் ஹிட்லர் என்றும் ஒரு முறை வர்ணிக்கவைத்தது.
இவர் அடுத்த மாதம் வெளியாகும் தனது புத்தகத்தில் புவி வெப்பமடைதல், வானிலை மாற்றம் குறித்து என்னென்ன செய்யவேண்டும் என்றும் எவ்வளவு செலவழிக்கவேண்டும் என்றும் பரிந்துரைகளை பட்டியலிட்டுள்ளார்.

ஆண்டொன்றிற்கு 100பில். டாலர்கள் செலவு செய்தால் இந்த நூற்றாண்டு முடிவதற்குள் வானிலை மாற்ற பிரச்சனைகளுக்கு பெருமளவு தீர்வு கண்டு விடலாம் என்று கூறுகிறார் லோம்பர்க்.
உதாரணமாக கடல் மட்டம் உயர்தல் என்பதற்கு சிறந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம், உலக அளவிலான மருத்துவ வசதி என்று இவரது பட்டியல் இந்த நூலில் நீள்கிறது.

உலகம் வெப்பமடைதலையொட்டி எழுந்த விவாதங்களில் சமீபத்தில் இமாலயப் பனி வற்றி வருவது குறித்த தரவுகள் தவறாகப் போனதையடுத்து சந்தேகவாதிகள் கை ஓங்கியிருக்கும் இந்த நிலையில் சந்தேகவாதத்தின் தலைமைப்பீடமாக இருந்து வந்த லோம்பர்கின் மனமாற்றம் ஐ.நா. அதிகாரிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவரை அடால்ஃப் ஹிட்லர் என்று வர்ணித்த பச்சௌரியே இந்த நூலை விதந்தோதிக் கூறுகையில், "இந்த நூல் சுற்றுச்சூழல் மாசு பற்றிய எண்ணிலடங்கா தகவல்களை அளிப்பதோடு, முக்கியமான கேள்விகளையும் அதற்கான தீர்வுகளையும் உள்ளடக்கியுள்ளது." என்று பாராட்டியுள்ளார்.

முன்பு நீங்கள் ஒரு சந்தேகவாதியாக இருந்தீர்களே என்று அவரிடம் சுட்டிக்காட்டியபோது, நான் மனிதனால் ஏற்படும் வெப்ப வாயு வெளியேற்றம் பற்றி சந்தேகம் கொள்ளவில்லை மாறாக அதன் விஞ்ஞான முடிவுகளின் மீதும், இதனால் உலகமே முடிந்து விட்டது என்பது போன்ற கருத்துக்கள் மீதுதான் சந்தேகம் கொண்டேன்" என்று கூறியுள்ளார்.
இந்த நூலில் மாற்று எரிசக்தி தயாரிப்பு குறித்த சில அரிய பரிந்துரைகளையும் அவர் கூறியுள்ளார் என்று இந்த நூலை வாசித்துள்ள சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :