செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Webdunia
Last Modified: புதன், 19 மார்ச் 2014 (08:26 IST)

இனியும் யாருக்காகவும் எதையும் நிரூபிக்கவேண்டியதில்லை - சேவாக்

இன்னும் 3 ஆண்டுகள் தன்னால் இந்திய கிரிக்கெட்டிற்கு பங்களிப்பு செய்ய முடியும் என்று கூறிய அதிரடி மன்ன விரேந்தர் சேவாக், தனது திறமையை உலகிற்கு காட்டிவிட்டதாகவும் இனியும் யாருக்காகவும் எதையும் தான் நிரூபிக்கவேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார்.
FILE

இது குறித்து அவர் அளித்த பேட்டியிலிருந்து சில:

இந்திய அணி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு ஐ.பி.எல்.-ல் அசத்த வேண்டியது அவசியம் என்று கருதுகிறீர்களா? என்று கேட்கிறீர்கள். நான் ஏற்கனவே போதுமான ஆட்டங்களில் எனது திறமையை இந்த உலகிற்கு காட்டிவிட்டேன். இனியும் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டியது அவசியம் இல்லை.

இப்போது ஷேவாக்குக்காகவும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும் விளையாட வேண்டிய நேரம் இது. அபாரமாக விளையாடி ரன்கள் குவித்தால், சம்பந்தப்பட்டவர்கள் தானாகவே கவனித்து, எனது பெயரை மீண்டும் பரிசீலிப்பார்கள். ஆனால் இதை மனதில் வைத்து விளையாடினால் எனக்குள் நெருக்கடி தான் ஏற்படும்.
FILE

இன்னும் 2 அல்லது 3 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை எனக்கு எஞ்சியிருப்பதாக நினைக்கிறேன். உடல்தகுதி மற்றும் பேட்டிங் திறனை மேம்படுத்திக் கொள்ள தொடர்ந்து உழைத்து வருகிறேன். பயிற்சிக்காக நிறைய நேரம் செலவிடுகிறேன்.

2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் நான் விளையாடலாம் அல்லது விளையாடாமலும் போகலாம். தற்போது உள்ளூர் போட்டிகளில் உற்சாகமாக அனுபவித்து விளையாடி வருகிறேன். ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடுவதை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன். இந்த முறை பஞ்சாப் அணி பட்டம் வெல்வதற்கு உதவிகரமாக இருப்பேன்.
FILE

அதே சமயம் என்னை டெல்லி டேர்டெவில்ஸ் அணி தக்க வைத்துக்கொள்ளாதது தொடக்கத்தில் ஏமாற்றம் அளித்தது. ஏனெனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக நான் தொடர்ந்து 6 ஆண்டுகள் விளையாடினேன். முத்திரை வீரர் அந்தஸ்துடன் இருந்தேன். ஆனால் இப்போது எல்லாமே மாறிப் போய் விட்டது.

இவ்வாறு கூறியுள்ளார் சேவாக்.