வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Muthukumar
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (18:52 IST)

வரலாறு படைத்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி!

இது புள்ளிவிவரங்களின் காலம்! கொலை, கொள்ளை, திருட்டு, கிரிக்கெட், விளையாட்டு, அரசியல் என்று வாழ்க்கையின் அனைத்து ஊடக இடையீட்டு பகுதிகள் அனைத்திலும் இன்று புள்ளிவிவரங்கள் பெரிதும் பேசப்படுகின்றன. எண்கள் மீது மக்களுக்கு ஒரு விதமான ஈர்ப்பு உள்ளது.

அது போன்ற ஒன்றுதான் ஆம் ஆத்மி பற்றிய இந்த புள்ளிவிவரமும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய கட்சியாக களமிறங்கும்  ஆம் ஆத்மி கட்சி 400 சீட்களில் போட்டியிடுகிறது. அதாவது கடைசியாக அறிவித்த வேட்பாளர் பட்டியலுடன் சேர்த்து.
 
இது இந்திய தேர்தல்கள் வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சாதனையாம்!
 
இதற்கு முன்னர் கன்ஷிராம் 1984ஆம் ஆண்டு ஆர்ம்பித்த பகுஜன் சமாஜ் கட்சி 1989-இல் தன் முதல் லோக் சபா தேர்தலில் போட்டியிட்டபோது 18 மாநிலங்களில் 245 தொகுதிகளில் போட்டியிட்டதே இந்திய தேர்தல்களில் அதிகபட்சமாம்!
 
400 சீட்களில் ஆம் ஆத்மி 30 சீட்களில் வென்றால் அது ஒரு மைல் கல்லாம். 3 சீட்களுக்கு மேல் வென்றாலே ஒரு புதிய கட்சி படைக்கும் 'அரிய' சாதனியாம் இது.
 
இது என்ன சார் புள்ளிவிவரம்? இத்தனையாண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தை காட்டும் புள்ளிவிவரமாகவல்லவா இது உள்ளது.
 
இருந்தாலும் புள்ளிவிவரம் புள்ளிவிவரம்தானே!! மக்க்ளுக்கு நம்பர்கள் மீது எப்போதுமே காதல்! ஆகவே இந்தப் புள்ளிவிவரமும் இருந்து விட்டுப் போகட்டும்.