வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Muthukumar
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (19:03 IST)

சோனியாவிற்கு எதிராக அஜய் அகர்வாலையும், ராகுலுக்கு எதிராக ஸ்மிருதி இராணியும் நிறுத்தியது பா. ஜனதா

பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 7–வது பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தின் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பாரதீய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். தஞ்சை தொகுதி வேட்பாளராக கருப்ப  எம்.முருகானந்தம் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
 
உத்தரபிரதேச மாநிலம் அமேதி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாரதீய ஜனதா சார்பில் டெலிவிஷன் நடிகை ஸ்மிர்தி இரானி போட்டியிடுகிறார். இவர் தற்போது டெல்லி மேல்–சபை எம்.பி.யாக இருக்கிறார். 

ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் அஜய் அகர்வால் நிறுத்தப்பட்டு உள்ளார். பண்டா தொகுதியில் பைரோன் பிரசாத் மிஸ்ரா போட்டியிடுகிறார்.
 
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் வாரணாசித் தொகுதியில் யாரை நிறுத்தப்போகிறது என்பதுதான் இப்போது சுவாரசியமான விஷயம்.
 
சோனியாவுக்கு எதிராக உமா பாரதி பெயரை பாபா ராம்தேவ் பரிந்துரை செய்தார். ஆனால் பாஜக கட்சி நிர்வாகம் அதனை ஏற்கவில்லை.
 
உமா பாரதியை இரு தொகுதிகளில் போட்டியிட வைக்க விருப்பமில்லை என்றும் அவர் ஜான்சி தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தட்டும் என்று கூறியதாக தெரிகிறது.
 
தமிழகத்தின் வேலூர் மக்களவை தொகுதியில் பாஜக ஏ.சி. சண்முகத்தை வேட்பாளராக அறிவித்துள்ளது. தஞ்சை தொகுதியில் கருப்ப முருகானந்தம் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.