கடந்த 18 ஆண்டுகளில் 200 முறை வாய்தா வாங்கிய ஜெயலலிதா - ஸ்டாலின்

Ilavarasan| Last Updated: வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (19:00 IST)
விரைவில் இன்னும் அதிகமான பட்டியல் வெளியாக உள்ளது. அவை என்ன தெரியுமா ? ஜெயலலிதா வீட்டில் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள தங்க - வெள்ளி நகைகள், 10,500 க்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள் விவகாரம், ஜெயலலிதா உபயோகித்த ஏராளமான கைக்கடிகாரங்களின் பட்டியல், அதுமட்டுமல்ல ஜெயலலிதா பயன்படுத்தி வந்த செருப்புகள் என பல்லாயிரம் கோடிகள் ரூபாய் மதிப்புள்ள பொருட்களின் பட்டியல் வெளியாக உள்ளது.
ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோரும் வாங்கிக் குவித்துள்ள ஒட்டுமொத்த சொத்துக்கள் கிட்டத்தட்ட 3300 ஏக்கர் நிலங்கள் என பெங்களூரு நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வழக்குரைஞர் பவானி சிங் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

1991 - 1996 ஆண்டுக்கால ஆட்சிக்காலத்தில், ஜெயலலிதா முதல்வராகப்
பொறுப்பேற்றபோது எனக்கு சம்பளமே வேண்டாம், ஆனால் அரசுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மாதம் 1 ரூபாய் மட்டும் சம்பளமாக வாங்கிக் கொள்கிறேன் என அறிவித்தார்.
அதன்படி 5 ஆண்டுகளில் ஜெயலலிதா பெற்றிருக்கக் கூடிய மொத்த சம்பளம் 60 ரூபாய். ஆனால் அந்த 5 ஆண்டுகால ஆட்சியில் ஜெயலலிதா வாங்கி குவித்த பலாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், சொத்துக்கள் எவ்வளவு என்று இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது என்றார் ஸ்டாலின்.


இதில் மேலும் படிக்கவும் :