வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. தே‌‌ர்த‌ல் 2014
  4. »
  5. தே‌ர்த‌ல் செ‌ய்‌திக‌ள்
Written By Webdunia
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (17:54 IST)

பாஜக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகள் விவரம்

பாரதீய ஜனதா கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.
 
FILE

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக பா.ஜ.க. வலுவான அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்த கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்தன.

பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. அந்த தொகுதிகளில் சிலவற்றை தேமுதிக கேட்டதாலும், இதர சில தொகுதிகளை கூட்டணி கட்சிகள் இடையே பிரித்துக்கொள்வதில் சிக்கல் நீடித்தது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் மற்றும் தமிழக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் பல்வேறு கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு காண முடியவில்லை.

இதற்கிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து, திருவள்ளூர், வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். இது பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இதனால் பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டது. என்றபோதிலும் நேற்று காலை முதலேயே பாஜக தொகுதி பங்கீட்டு குழுவினர் கூட்டணி கட்சிகளிடம் செல்போன் மூலம் ஆலோசனை நடத்தி வந்தனர். விஜயகாந்திடமும் நேற்று பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

விஜயகாந்த் நேற்று மதியம் 3 மணிக்கு அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட ஆற்காட்டில் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விஜயகாந்த் திட்டமிட்டப்படி 3 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கவில்லை.

இந்தநிலையில் பாஜக - தேமுதிகவுடனான தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே விஜயகாந்த தனது பிரச்சாரத்தை ஆற்காட்டில் தொடங்கினார். கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு போட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், மோடி பிரதமர் ஆக ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பாரதீய ஜனதா கூட்டணியில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. அந்த தொகுதிகள் விவரம் வருமாறு:-

1. மத்திய சென்னை

2. திருவள்ளூர்

3. வட சென்னை

4. சேலம்

5. திருச்சி

6. நெல்லை

7. விழுப்புரம்

8. கடலூர்

9. கள்ளக்குறிச்சி

10. திருவண்ணாமலை

11. திண்டுக்கல்

12. நாமக்கல்

13. மதுரை

14. பொள்ளாச்சி

பாஜக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு கிடைக்க இருக்கும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

பா.ம.க

1. அரக்கோணம்

2. கிருஷ்ணகிரி

3. ஆரணி

4. தர்மபுரி

5. சிதம்பரம்

6. மயிலாடுதுறை

7. ஸ்ரீபெரும்புதூர்

8. கரூர்

மதிமுக

1. காஞ்சீபுரம்

2. விருதுநகர்

3. தூத்துக்குடி

4. ஈரோடு

5. தேனி

6. சிவகங்கை

7. நாகப்பட்டினம்

பா.ஜ.க

1. தென் சென்னை

2. தஞ்சாவூர்

3. வேலூர்

4. கோவை

5. ராமநாதபுரம்

6. நீலகிரி

7. கன்னியாகுமரி

8. தென்காசி

இந்திய ஜனநாயக கட்சி

1. பெரம்பலூர்

கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி

1. திருப்பூர்

என்.ஆர்.காங்கிரஸ்

1. புதுச்சேரி

இந்த பட்டியலை பாரதீய ஜனதா மேலிடம் முறைப்படி அறிவிக்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அப்போது பட்டியலில் இடம் பெற்று உள்ள தொகுதிகளில் ஒன்றிரண்டு மாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.