ராகுல் காந்தி குறித்த பா.ஜ.க.வின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்

FILE

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ள தொலைக்காட்சி பேட்டியால் சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி குஜராத் கரலவத்தை வேடிக்கை பாத்ததாகவும், இஸ்லாமியர்களை கொல்லத்தூண்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். 1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை காங்கிரஸ் கட்சி தடுக்க முயற்சி எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சிற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைத்திருப்பவே ராகுல் காந்தி இப்படி பேசுவதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்க்தி ராகுலின் பேச்சு உண்மையான அர்ப்பணிப்புடன் கூடியது என விளக்கமளித்துள்ளார்.

Webdunia| Last Modified புதன், 29 ஜனவரி 2014 (18:23 IST)
ராகுல் காந்தி மீது பா.ஜ.க கூறியுள்ள குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, அவர் ஊழல் கரை புரண்ட இந்திய அரசியலில் மாற்றம் கொண்டு வர உண்மையிலே விரும்புவதாக தெரிவித்துள்ளது.
மோடி போன்று வார்த்தை ஜாலங்களால் பொய் பேசுபவர் அல்ல ராகுல் காந்தி எனவும் அவர் தெரிவித்தார். சீக்கியர்கள் கலவரத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்டதை சுட்டிக்காட்டிய அவர் குஜராத் இனக்கலவரத்துக்கு பா.ஜ.க சார்பில் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.


இதில் மேலும் படிக்கவும் :