மன்னிப்பு கேட்க முடியாது - மணிசங்கர்

Webdunia|
FILE
காங்கிரஸ் கூட்டத்தில் டீ விற்க அழைத்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது என மாநிலங்களவை எம்.பி. மணிசங்கர் பதிலளித்துள்ளார்.

மாநிலங்களவை எம்.பி. மணிசங்கர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'இது ஓவியம் வரையும் இடமல்ல. குத்துச்சண்டை களம்' என்றார். மேலும் டெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், ‘இந்த 21 ஆம் நூற்றாண்டில் நரேந்திர மோடி எப்பொழுதும் பிரதமராக முடியாது. டீ விற்க வேண்டுமானால் வாருங்கள். ஏற்பாடு செய்து தருகிறோம்' என்றும் பேசி இருந்தார்.
இதற்கு பா.ஜ. தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பின. மோடியிடம் மன்னிப்பு கேட்க கோரினர். அதற்கும் மணிசங்கர், மன்னிப்பு கேட்க முடியாது. ஏனெனில் பா.ஜ.வில் உள்ளவர்கள் தான் அவர் டீ விற்கும் பையனாக இருந்து வந்தவர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர் என்று பதிலடி தந்தார்.

பா.ஜ. செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், ‘மணி சங்கரிடமிருந்து சிறப்பாக எதையும் எதிர்பார்க்க முடியாது' என்றார். காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா டிவிட்டரில், ‘மோடியை பற்றி எதிர்மறையான கருத்துகள் நிறைய உள்ளன. அதை விட்டு ஏழ்மை நிலையை பற்றி பேசுவது தேவையற்றது' என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :