பா.ஜ.க.வின் பொருளாதார கொள்கை ரத்தக்கறை படிந்தது - ப.சிதம்பரம்

FILE

எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒருபோதும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியதில்லை என்று அவர் கூறினார். கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், ராகுல் காந்தி பிரதமராவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

டவோசில் நடந்த உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் பேசிய அவர், ஆம் ஆத்மி கட்சியின் அணுகுமுறையை சாடினார். மிரட்டல் அரசியல் இந்த நாட்டில் செல்லாது என்றும் அவர் கூறினார்.

பா.ஜ.க. முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் போது, அதற்கு முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் எப்படி வாக்களித்திருப்பார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், பா.ஜ.க. ஒரு பிரிவினருக்கான கட்சி என்றும் குற்றம்சாட்டினார். அடுத்த பிரதமராக சிதம்பரம் வருவாரா என்ற கேள்விக்கு பதிலாக, ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் என்றார்.
Webdunia|
பா.ஜ.க. முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கைகள் பிற்போக்குத்தனமானவை, ரத்தக்கறை படிந்தவை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :