நாடாளுமன்ற தேர்தலில் இடது சாரி கட்சிகள் அ. தி.மு.க.,வுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் : ஜெயலலிதா

FILE

கூட்டணி குறித்து இன்று அ,தி.மு.க, பொது செயலரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பரதன், சுதாகர் ரெட்டி, தா.பாண்டியன் ஆகியோர் போயஸ் கார்டனில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் தற்போதைய கூட்டணி நிலை நீடிக்க முடிவு செய்யப்பட்டது.

Webdunia|
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இடது சாரி கட்சிகள் அ. தி.மு.க.,வுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். இந்த கூட்டணி அதிக இடங்களை வென்றால் ஜெயலலிதா, பிரதமராகும் வாய்ப்பு உள்ளது என சந்திப்பிற்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பரதன் கூறினார்.
கூட்டணி குறித்து ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இடது சாரிகளுடன் இணைந்து செயலாற்றுவோம். அமைதி, வளம், வளர்ச்சி, ஆகியனவற்றை குறிக்கோளுடன் தேர்தலை சந்திப்போம். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :