முதுநிலை மருத்துவப் படிப்பு: 2ஆம் கட்ட கலந்தாய்வு துவக்கம்

சென்னை| Webdunia| Last Updated: ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (00:18 IST)
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்கியுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா வெளியிட்டுள்ள குறிப்பில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ முதுநிலை படிப்பு, பட்டயப் படிப்பு, ஐந்தாண்டு எம்.சி.எச் (நரம்பியல் அறுவை சிகிச்சை) படிப்புகளில், 2009-10ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 16, 17, 18ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது.
எம்.பி.டி., எம்.எஸ்.சி., (நர்சிங்) படிப்புகளுக்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு ஜூன் 22ஆம் தேதியும், எம்.பார்மஸி படிப்பிற்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 23ஆம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி tnhealth.org மற்றும் tn.gov.in என்ற இணையதளத்திலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :