மருத்துவ மேற்படிப்பு‌க்கு 2ஆம் கட்ட கல‌ந்தா‌ய்வு ஜூன் 16ல் தொடக்கம்

செ‌ன்னை | Webdunia| Last Modified வெள்ளி, 12 ஜூன் 2009 (17:55 IST)
மருத்துவ மேற்படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கல‌ந்தா‌ய்வவரு‌ம் 16ஆ‌ம் தே‌தி தொட‌ங்கு‌கிறது.

மருத்துவ பட்ட மேற்படிப்பு, டிகிரி, டிப்ளமோ, பல் மருத்துவ மேற்படிப்பு, 5 ஆண்டு எம்.சி.எச் (நரம்பியல் அறுவை சிகிச்சை) உள்ளிட்ட படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதற்கான முதற்கட்ட கல‌ந்தா‌ய்வு முடிந்து விட்டது. மேற்கண்ட படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 16, 17, 18 ஆ‌கிய தேதிகளில் நடக்கிறது.
மேலும், இந்த ஆண்டில் எம்.பி.டி, எம்.எஸ்சி (நர்சிங்) படிப்புக்கான நேர்முக கல‌ந்தா‌ய்வு 22ஆம் தேதி நடக்கிறது. அதேபோல், இந்த ஆண்டில் எம்.பார்மசி படிப்புக்கான நேர்முக கல‌ந்தா‌ய்வு 23ஆம் தேதி நடக்கிறது. மேற்கண்ட கல‌ந்தா‌ய்வுகள் அனைத்தும், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நடக்‌கிறது.

இதுகுறித்து, மேலும் விவரம் வேண்டுவோர் www.tnhealth.org, www.tngov.in ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :